visit 'giridhar.co.in'

ஒரு மாறுபட்ட பத்திரிகை

நான் கூடியமட்டும் கல்யாணம், பொது கூட்டம், பாராட்டு விழா போன்ற எந்த நிகழ்ச்சிகளுக்கும் போவதை தவிர்த்து விடுவேன். அனால் வருடங்கள் ஓட, நிலைமையும் மாறி வருகிறது. சொந்தகாரர்கள் நான் வருவதை எதிர் பார்க்கிறார்கள். வராவிட்டால் தவறாக நினைக்கிறார்கள். அப்பா அம்மா நிழலில் இவ்வளவுகாலம் ஒலிந்து கொண்டு தப்பிப்பது இனி செல்லாது என்று நிலைமை ஆகிவிட்டது.

சமீபத்தில் எனது நெருங்கிய சொந்தம் ஒருவர் அவர் மகனுக்கு கல்யாணம் நிச்சயம் செய்தார். இதற்கு அவர் ஒரு பத்திரிகை அச்சிட்டார். இது சற்று வழக்கத்துக்கு மாறுபட்ட நூதன பத்திரிகை. பத்திரிகையின் பின்புறத்தில் ஒரு அறிவிப்பு. இந்த திருமண நிச்சய விழாவுக்கு வருவோர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு தருவதாக அதில் குறிப்பிட்டு இருந்தது. விவரத்தை இந்த கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணுங்கள்.

இதனை பலர் கேலி செய்தனர், சிலர் விமர்சித்தனர், சிலர் எதிர்த்தனர். எவர் என்ன நினைத்தாலும் பரவாஇல்லை என்று விழ நாள் அன்று சிறப்பாக போட்டி நடந்தது. மூன்று அதிர்ஷ்ட்ட நபர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு பரிசும் வழங்கப்பட்டனர். எனக்கு இது மிகவும் பிடித்து இருந்தது.

வழகத்துக்கு மாறாக நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவர்க்கும் தோன்றும் அனால் அதை நடத்த துணிச்சல் பலரிடம் இருக்காது. இவரிடம் அந்த துணிச்சல் இருந்தது, ஆர்வம் காணப்பட்டது, செய்தும் முடித்தார். விழாவுக்கு சென்றோம், பங்கேற்றோம், வயறு முட்ட சாபிட்டோம் என்று இல்லாமல் எங்களுக்கும் ஒரு பொழுதுபோக்காக இருந்தது. இப்படி மாறுபட்ட யோசனைகள் தென்னிந்திய வீட்டு நிகழ்ச்சிக்களில் நடைமுறைக்கு வந்தால் எல்லா விழாக்களும் கலை கட்டும்.

இங்கும் நான் ஏன் வழக்கமான சேட்டையை காட்டினேன். எனது அட்டையில் ஏன் பேர் மற்றும் விலாசத்தை எழுதாமல்: பாரக் ஒபாமா, வெள்ளை மாளிகை, அமெரிக்க மாகணம் என்று குறித்து அங்கு வைத்து இருந்த பேட்டியில் சேர்த்து விட்டேன். பரிசு விழவில்லை. விழுந்து இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்துருக்கும். மணமக்கள், அறிவிப்பாளர் மற்றும் பார்வையாளர்கள் ஒரு சில நிமிடம் திகைத்து பொய் இருப்பர்.

front

back

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s